×

ஐ.எஸ்.ஐ.-க்கு உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் நாட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்.. : மத்திய அரசு அதிரடி

இஸ்லாமாபாத் : டெல்லியில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 2 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை நிலவி வரும் நிலையில், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லையில் பிரச்சனை செய்ய திட்டமிட்டு வருகிறது. நேற்றுதான் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதேபோல் லடாக் எல்லையில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் உளவாளிகள் இருவர் அகப்பட்டு உள்ளார் .அவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்த அபீத் ஹுசைன் மற்றும் தாஹீர் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர். இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரகத்திற்கும் இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : diplomats ,country ,Pakistani ,ISI , ISI, intelligence, Pakistan, embassy officials, country,, central government, action
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!