×

பிரதிஷ்டை தின பூஜை சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை  ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடை  திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பிரதிஷ்டை தினம்  ஜூன் 1ம் தேதி ஆகும். இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் சபரிமலை கோயில் நடை  திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி  சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று சிறப்பு பூஜைகள்  எதுவும் நடைபெற வில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை  திறக்கப்பட்டு அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். இந்த  தரிசனத்தில் பக்தர்களுகு்கு அனுமதி இல்லை.

Tags : Opening Ceremony of Dedication Day ,Pooja Sabarimala Opening Ceremony of Dedication Day ,Pooja Sabarimala , Opening Ceremony, Dedication Day Pooja ,Sabarimala
× RELATED பிரதிஷ்டை தின பூஜை சபரிமலை நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை