×

கலைஞரின் 97வது பிறந்த நாள் விழா; 1.33 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி: திமுக தலைவர் மு‌.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியை திமுக தலைவர் மு‌.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்டத்தில், கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ,  ஏற்பாடு செய்திருந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன் விவரம் வருமாறு: சோழிங்கநல்லூர் மத்தியப் பகுதியில், பகுதிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.அரவிந்த் ரமேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30,097 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதியில், மாவட்டத் துணைச் செயலாளர் தா.விஸ்வநாதன் ஏற்பாட்டில் பாலவாக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12,500 குடும்பங்களுக்கும், சோழிங்கநல்லூர் மேற்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் பெருங்குடி - திருமலை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும்,

வேளச்சேரி மேற்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் சு.சேகர் ஏற்பாட்டில் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். சைதை கிழக்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் இரா.துரைராஜ்  ஏற்பாட்டில் மடுவின்கரை பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும், ஆலந்தூர் வடக்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் பி.குணாளன் ஏற்பாட்டில் தர்மராஜா கோயில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கலைஞர் நகர் தெற்குப் பகுதியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30,000 குடும்பங்களுக்கு ஒரு கோடியே, 41 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவில் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார். அதேபோல, கலைஞர் நகர் தெற்குப் பகுதியில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் 9-வது செக்டார், 46-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20,500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில்  21,500 குடும்பங்களுக்கும், 1508 சின்னத்திரை தொழிலாளர்கள், திரைப்பட தயாரிப்பு தொழிலாளர்கள், துணை இயக்குனர்கள் என திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் க.தனசேகரன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், மு.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : MK Stalin ,artist ,The Artist ,DMK ,families ,Birthday Party , The artist's 97th birthday party,Corona Relief Assistance, 1.33 lakh families, DMK leader MK Stalin
× RELATED 2023 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு