×

புதிய இயக்குநர் நியமனம்

சென்னை: அனைவருக்கும் கல்வி இயக்ககம், மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இயக்குநரகங்கள், இயங்கி வந்தன. இவற்றுக்கு தனித்தனியாக மாநில திட்ட இயக்குநர்கள் இருந்தனர்.  இரண்டு ஆண்டுக்கு முன்பு இரு திட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டு சமக்ர சிக்‌ஷா திட்டம் என்று பெயரிடப்பட்டது. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி சுடலைக் கண்ணன் மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் இந்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். நேற்று அவர் பணிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக இந்த பணியை பார்ப்பார்.

Tags : Director of Appointment , Appointment , new Director
× RELATED அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.: ஐவர் குழு ஆலோசனை