×

10ம் வகுப்பு தேர்வு முடியும் வரை மாணவர் விடுதிகளை திறக்க வேண்டும்: அரசு உத்தரவு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை அடுத்து பிசி, எம்பிசி, மாணவர்களுக்கான விடுதிகளை 11ம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் நேற்று வெளியிட்ட அரசாணை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புக்கு விடுபட்டதேர்வுகள், பிளஸ் 2 தேர்வில் எழுத முடியாமல் போனவர்களுக்கான தேர்வுகள் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து அனைத்து பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், டிஎன்சி, மாணவர்களுக்கான விடுதிகளை 11ம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறக்க வேண்டும். விடுதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் மாணவ மாணவியருக்கு காலை மாலை என இரண்டு வேளையும், காய்ச்சல் இருக்கிறதா என  பரிசோதித்து பதிவேடுகளில் விடுதி காப்பாளர்கள் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்வது, முகக் கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். நோய் பாதிப்பு பகுதிகளில்இருந்து வரும் மாணவர்களை விடுதிகளிலும் தனிமைப்படுத்த வேண்டும்.

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர வசதியாக போக்குவரத்துவசதிகளை அந்தந்த மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் விடுதி மாணவர்கள் தேர்வு எழுதுவதை உறுதி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் விடுதித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டும்.

Tags : Student hostels , Student hostels,opened,10th grade,selected, Government directive
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி...