×

வடமாநில தொழிலாளர்களை ரயிலில் அனுப்பியபோது பரவியதா? தெற்கு ரயில்வே ஊழியர்கள் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே ஊழியர்கள் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு ரயில்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பியபோது அவர்கள் மூலம் தொற்று பரவியதா அல்லது உள்ளூரில் மற்றவர்களிடம் இருந்து பரவியதா என்று தெரியாமல் சக பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் சில ஊழியர் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த உதவி லோகோ பைலட் ஆக பணி புரிந்து வரும் நபருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைப்போன்று தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் (பிசிஓஎம்) அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் கடந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர். இதையடுத்து சோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஏடிஆர்எம் பதவியில் பணி புரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில்கள் தொழிலாளர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்ட தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்று கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் 81 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்து.

Tags : Northern Territory ,Southern Railway , Spread.Northern Territory workers.train. Coronation affects. 81 Southern Railway employees
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்