×

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் ரத்து

சென்னை: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவமான வைகாசி பிரமோற்சவம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள சூழ்நிலையில், அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவம் விழா அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பக்தர்கள், பிரமோற்சவ உபயதாரர்கள் மற்றும் நகர பொதுமக்கள் தக்க ஒத்துழைப்பு நல்குமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kanchi ,Varadaraja Perumal temple , Kanchi Varadaraja Perumal temple, canceled
× RELATED காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில்...