×

போடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்

போடி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் போடியில் 2 பகுதிகளில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் கோயில் தெருவில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. இந்த சந்தையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்கி வந்தனர். இதனால் இப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் நிலவியது. இதையடுத்து இப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போடி நகராட்சி மற்றும் போலீசார் சார்பில் சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில் போடியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அருகில் தற்காலிக சந்தை அைமக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோன்று போடி டிவிகேகே நகரிலும் தற்காலிக சந்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.


Tags : Bodi , Bodi, temporary market
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்