திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்.:கடத்தப்பட்ட ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை சிசிடிவி காட்சிகளை கொண்டு 4 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டசேர்ந்த ரோஷன்செல்ஸ் என்பவருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை பார்ப்பதாக கூறி இன்று காலை கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்திய விசாரணையில் கடத்தல்காரி 4 மணி நேரத்தில் சிக்கினார். இதனையடுத்து போலீசார் கடத்தல்காரியிடம் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தியவர் திருப்பத்தூரை சேர்ந்த நைகின என்பது தெரியவந்துள்ளது. எதற்காக குழந்தையை கடத்தினர் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டப்பகலிலேயே அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>