×

நாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்

டெல்லி: மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 8,380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 193 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5491-ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 89,995 பேர் சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 86,984-ஆக அதிகரித்துள்ளது

இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக் கூடிய தடுப்பூசி ஆய்வுகள் நாட்டின் 3 இடங்களில் நடப்பதாகவும், அவற்றின் முடிவுகள் இன்னும் 15 நாட்களில் தெரியும் எனவும் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தவிர மோனோகுளோனல் ஆன்டிபாடீஸ் உருவாக்குவதற்கான ஆய்வுகள் புனே மற்றும் இந்தூரிலும், பிளாஸ்மா தெரபி ஆய்வு கொல்கத்தாவிலும் நடப்பதாக ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் சேகர் மண்டே தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த, ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் சமுதாய எதிர்ப்புத் திறன் உருவாகும் வரை காத்திருப்பது இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டுக்கு ஆபத்தாக மாறி விடும் என கூறியுள்ள அவர், தொற்று பரவுவதே தடுப்பதே இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : locations ,country ,ICMR , Corona, Vaccine Studies, ICMR
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...