×

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்

வாடிகன்: ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவால் உலகளவில் 61,60,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,71,006 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. வாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சுமார் 3மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பெரும்பாலோனார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், தேசியத் தலைவர்கள் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். தற்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். நீண்டகால பொருளாதார மற்றும் சமூகத் தீர்வுகளை தீர்த்து வைக்க வேண்டும்.ஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையினை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைவர்களை கேட்டு கொண்டார். வாடிகன் தோட்டத்தில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆலயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


Tags : Pope Francis , Weapons, Corona, Preventive Research, Pope Francis
× RELATED போப் உடல்நிலை பாதிப்பு