×

தாவரவியல் பூங்காவில் காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை சிகிச்சைக்கு பின் நடக்க துவங்கியது

ஊட்டி : ஊட்டி  தாவரவியல் பூங்காவில் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் தவித்த  சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன்  சிகிச்சை அளித்து வரும் நிலையில், தற்போது நடக்க துவங்கியுள்ளது.  ஊட்டி  தாவரவியல் பூங்காவில் இருந்து தோடர் மந்து செல்லும் சாலையில் கடந்த 16ம்  தேதி சிறுத்தை ஒன்று காயத்துடன் கிடந்தது. பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால், அது நடக்க  முடியாமல் தவித்தது.
இதை கண்ட பூங்கா ஊழியர்கள் மற்றும் ேதாடர் மந்து  மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர்  அதனை மீட்டு ஊட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ெகாண்டு வந்தனர்.  கடந்த 13 நாட்களாக கூண்டில் வைத்தே சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்ைச அளித்து வருகின்றனர். நரம்பு  மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  

தொடர், சிகிச்சையின் காரணமாக காயமடைந்த சிறுத்தை தற்போது கூண்டிற்குள்  எழுந்து நடக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் இதற்கு சிகிச்ைச  அளிக்கப்பட்ட பின், இதனை காட்டிற்குள் விடுவதா அல்லது சென்னை வண்டலூர் வன  விலங்குகள் காப்பகத்திற்கு அனுப்புவதா என்பது குறித்து வனத்துறையினர்  ஆலோசித்து வருகின்றனர். சாகும் தருவாயில் இருந்த சிறுத்தையை மீட்டு  சிகிச்சை அளித்த நீலகிரி வனக்கோட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை  துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் பாராட்டு  தெரிவித்து வருகின்றனர்.

Tags : botanical garden ,walk , wounded leopard,botanical garden , walk after treatment
× RELATED கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்