×

யோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...!

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நாட்டு மக்களுடன் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நிதியில் ஏழைகளுக்கு  மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் உதவி செய்தார். அவரை மன் கிபாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் பிரதமர் பேசியது பின்வருமாறு..

* கொரோனாவிற்கு எதிரான போர் நீண்ட காலம் இருக்க போகிறது.
* கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம் இது.
* கொரோனா போர்- மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.
* உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக உள்ளது.

* பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்
* மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக்காரணம்
* கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.

* தனிமனித இடைவெளியை கடைபிடித்தால்தான் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.
* நாட்டில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
* கொரோனாவால் ஏழைகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
* பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது.

* புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது.
* புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
* புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்வே உதவி வருகிறது.
* புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஆணையம் அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை.
* புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை.

* பலர் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர்.
* மக்கள் தலைமை பண்பை தாங்களாகவே எடுத்துக்கொண்டு செயல்பட தொடங்கியுள்ளனர்.
* சுயசாப்பு இந்தியா நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன்.

* ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழைகளின் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
* நோய் எதிர்ப்பு சக்திக்கு யோகா முக்கியமானது; யோகா செய்வதை கடைபிடியுங்கள்.
* ஊரடங்கு காலத்தில் பறவைகள், விலங்குகள் சுதந்திரமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன.
* மாசு குறைந்து காட்சிகள் தெளிவாக உள்ளன; இது தொடர வேண்டும்.

* இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது.
* இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும் போது பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படும்.
* வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

Tags : Mann Ki Baat ,speech ,Modi , Practice yoga; We should beware of curfew ... PM Modi's speech at Mann Ki Baat ...!
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...