×

இருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா நேற்று வெளியிட்ட அறிக்கை:  ஊரடங்கு உத்தரவால் மின்வாரியம் வீடுகளில் கணக்கெடுக்க இயலாத நிலையில் முந்தைய மாதத்தில் கட்டிய பணத்தை செலுத்துமாறு கூறியிருந்தது. அதன்படி மக்கள் பணம் கட்டியிருந்தனர். தற்போது, வீடுகளுக்கு கணக்கெடுப்புக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் வீடுகளில் பயன்படுத்திய மொத்த யூனிட்டையும் கணக்கிட்டு பணத்தை செலுத்தும்படி தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதுபோன்று தமிழக அரசு ரூ.1000 கொடுத்த பிறகு அதை வழிப்பறி கொள்ளை போன்று டாஸ்மாக் திறந்தும், மின்சார வாரியத்தால் மின் கட்டணத்தை செலுத்தும்படியும் பறிப்பது எந்த விதத்தில் நியாயம்.

தமிழக அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.  ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் செலுத்திய கட்டணத்திற்கான யூனிட்டுகளை கழித்து மீதமுள்ள யூனிட்டுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Twofold Power, Congress Minority Unit
× RELATED தன்னை முன்னிலைப்படுத்த ராமதாஸ்...