×

காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது

திருச்சி:புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 24 வயது ஆணும், 23 வயது பெண்ணும் பணிபுரிகின்றனர். விராலிமலையை சேர்ந்த இருவருமே திருமணமானவர்கள். ஆனால், நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பைக்கில் வந்த அந்த வாலிபர், அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு, திருச்சி நோக்கி வந்தார். வழியில் மணிகண்டம் பகுதியில் சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, இருட்டு பகுதியில் புதருக்குள் ஒதுங்கினர். அப்போது, 3 வாலிபர்கள் பட்டா கத்திகளுடன் திடீரென அந்த இடத்துக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் கள்ளக்காதலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 3 பேரும் அந்த வாலிபரை அடித்து, உதைத்து கை, கால்களை கட்டினர். பின்னர் 3 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.

மேலும் அந்த பெண் அணிந்திருந்த இரண்டரை பவுன் தோடு, செயின் மற்றும் வெள்ளிக்கொலுசு செல்போன், அந்த வாலிபரிடமிருந்து செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு 3 பேரும் ஓடி விட்டனர். பின்னர் கள்ளக்காதலர்கள் இருவரும் விராலிமலை காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். நகை, பணம் மட்டும் கொள்ளையடித்தனர் என புகார் செய்தனர். திருச்சியைசேர்ந்த முருகன்(22), நந்தகுமார்(20), ஹெமராஜ்(28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது கூட்டு பலாத்காரம் நடந்தது தெரியவந்தது. இது குறித்து விராலிமலை போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


Tags : rape ,lover ,Trichy Teen ,Trichy , Boyfriend, teenager, gang rape, trichy, 3 arrested
× RELATED பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு...