×

வீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணியாவிட்டால் கைது: சேலம் கலெக்டர் எச்சரிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், மாஸ்க் அணியாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், சாலைகளில் உலாவும் பலர், முக கவசம் இல்லாமல் சுற்றுவதை காணமுடிகிறது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கூறுகையில், கொரோனாவில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் முதல் முறையாக இருந்தால் ₹100 அபராதமும், அதே நபர் இரண்டாம் முறையாக இருந்தால் ₹500 அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து, அதே நபர் மூன்றாம் முறையாக முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால், தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2ன் படி அவரை காவல் துறையின் மூலம் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : home , Corona, Mask, Arrest, Salem Collector
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...