×

என்னிடம் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டில் குறைகள் இருக்காது: நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்

புதுடெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதம்: கடந்த ஓராண்டாக எனது அரசு பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது. பல சவால்களும், பிரச்னைகளும் நாட்டை எதிர்கொண்டுள்ளன. நாட்டுக்காக நான் இரவும் பகலும் உழைக்கிறேன். என்னில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், நம் நாட்டில் எந்த ஒரு குறையும் இருக்காது.  கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயம், யாரும் பாதிக்கப்படவில்லை என கூறிவிட முடியாது. குறிப்பாக, தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு தொழில் துறையை சேர்ந்த கைவினைஞர்கள், வணிகள் மற்றும் சக நாட்டு மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இருப்பினும், மக்கள் தங்களின் அசவுகரியங்கள், பேரழிவுகளாக மாறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நீண்ட யுத்தம். அதில் நாம் வெற்றிப் பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளோம். இந்த பாதையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி நிதி சலுகை முக்கியமான படியாகும்.  கடந்த 5 ஆண்டில் சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழி தாக்குதல் மூலம் ராணுவம் தனது வலிமையை சுட்டிக்காட்டி உள்ளது. 370 வது பிரிவை ரத்து செய்தது, ராமர் கோயில் தீர்ப்பு, முத்தலாக் என்ற காட்டுமிராண்டி நடைமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தம் இந்தியாவின் பரிவு, மற்றவர் துன்பத்தில் எடுத்துக் கொண்ட அக்கறையை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.  இதற்கிடையே, பாஜ தலைமையிலான ஆட்சியின் முதலாம் ஆண்டு ‘ஏமாற்றம், பேரழிவு மேலாண்மை, கொடூர வலி’ என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.


Tags : nation ,country ,Modi , Nation, Modi, Letter
× RELATED 18,626 பக்க அறிக்கை குடியரசுத் தலைவரிடம்...