சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க ஒத்துழைப்பு: வங்கி நிர்வாகங்களிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி கடனுதவி அதிகளவில் நம்முடைய மாநிலத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்க வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு, ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறைசெயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவர் கர்ணம் சேகர், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பத்மஜா சந்துரு, இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் எஸ்.என்.எம்.சுவாமி, நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழ்நாட்டில் ஏறத்தாழ 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் எம்எஸ்எம்இ தொழில் துறையின் பங்கு  30 சதவீதமாகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி கூடுதல் நிதி உதவி அதிகளவில் நம்முடைய மாநிலத்திற்கு கிடைக்க நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>