×

சிறப்பு வார்டில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய மாநகராட்சி ஊழியர் சாவு

சென்னை:  சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 59 வயது நபர், புரசைவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 21ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த 28ம் தேதி இவர் குணமடைந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள்,  அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் தனிமையில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மயிலாப்பூரில் உள்ள மருந்து கடை உரிமையாளருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவரது உடலை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்துள்ளனர். அவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா சிறப்பு வார்டில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு வந்தவர்கள் திடீரென உயிரிழப்பது அதிகரித்துள்ளது. எனவே, சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்தவர்களையும் அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : recovery , Special ward, healed, corporation employee, death
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...