×

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை

டெல்லி: விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விளையட்டு சங்கமும் சிறந்த வீரர்களின் பெயர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். விருதுக்கு தகுதியான நபர்தானா? என்பதை கண்டறிய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு நற்சான்றிதழ் அளித்தபின், மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 2016 ஜனவரில் இருந்து 2019 டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்க இருக்கிறோம்.

அந்தந்த விளையாட்டு சங்கங்கள் பெயர்களை அனுப்பி வைக்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்நி்லையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரோகித் சர்மா பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஷிகர் தவான், இஷாந்த் சர்மா பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் தீப்தி சர்மா என்ற வீராங்கனை பெயரையும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரோகித் சர்மா கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடினார். ஐந்து சதங்களுடன் அதிக ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.


Tags : Ishant Sharma ,Rohit Sharma ,Kel Ratna Award ,Deepti Sharma ,Shikhar Dhawan , Kel Ratna Award, Rohit Sharma, Arjuna Award, Ishant Sharma, Shikhar Dhawan, Deepti Sharma
× RELATED விளையாட்டுத்துறையின் உயரிய விருதான...