×

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் சென்றவர்களில் 19 நாளில் 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல்

புதுடெல்லி: ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கடந்த 19 நாளில் 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகி உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் இன்று வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் வெளிமாநிலங்களில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு ெசல்ல வசதியாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் கடந்த மே 1ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் 27 வரை கிட்டதிட்ட 19 நாட்களில் 3,840 ரயில்கள் இயக்கப்பட்டன.

சுமார் 50 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். இந்த ரயில்களில் செல்வோரில் பெரும்பாலனோர் தொழிலாளர்கள் என்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. பசிக் கொடுமை, உடல் பலகீனம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ரயில்களில் செல்வோர் இறந்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் சிறப்பு ரயில்களில் சென்று இறப்போரின் எண்ணிக்கையும் கவலையளிக்க கூடியதாக இருக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரயில்வே வாரியத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துடன் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் ேகட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் பயணிப்போரில் பலர் மனச்சோர்வு, கடும் வெயிலால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் பசியால் இறந்ததாக ரயில்வே அறிக்கையில் ெதரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற அதிக இறப்புகளின் விபரங்கள் வெளிவருவது இதுவே முதல்முறை. இதுெதாடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறப்பு ரயில்களில் பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் சுமார் 80 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். இருப்பினும், மாநிலங்களுடன் ஒருங்கிணைந்த இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’ என்றனர்.

ரயில்வே அமைச்சின் செய்தித் தொடர்பாளரிடம், 80 தொழிலாளர்கள் இறப்புகள் குறித்து கேட்டபோது, ‘ரயில்வே வாரிய தலைவர் இந்த கேள்விக்கு பதில் அளிப்பார்’ என்றனர். இந்நிலையில், ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், ‘யாருடைய மரணமும் ஒரு பெரிய இழப்புதான். இந்திய ரயில்வேயை பொருத்தவரை பயணிகளில் யாராவது நோய்வாய்ப்பட்டால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதுபோன்று பல பயணிகள் காப்பாற்றப்பட்டனர். பல பிரசவங்களும் நடந்துள்ளன. இருந்தும் ரயில்களில் பயணிக்கும் தொழிலாளர்களின் அவல நிலையை காண முடிகிறது.

இறப்பு ஏற்பட்டால், உள்ளூர் அதிகாரிகள் அதற்கான காரணத்தை விசாரிக்கின்றனர். பசியால் இறந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சில மரணங்கள் நிகழ்ந்தன, நாங்கள் புள்ளிவிபரங்களைத் தொகுத்து வருகிறோம். சில நாட்களில் அவற்றை வெளியிடுவோம்’ என்றார். தனியார் செய்தி நிறுவனம் செய்த ஆய்வின்படி, கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம், வடகிழக்கு ரயில்வே மண்டலம், வடக்கு ரயில்வே மண்டலம் மற்றும் வட மத்திய ரயில்வே மண்டலம் உள்ளிட்ட பல மண்டலங்களில் மே 9 முதல் மே 27 வரை அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இறந்தவர்களில் 4 முதல் 85 வயதுடையவர்களாக உள்ளனர். ஒரு சில இறப்புகளுக்கு காரணம், பலவித நோய்கள் அல்லது விபத்துக்கள் என்று தெரியவந்துள்ளது.

மே 1 முதல் மே 8 வரை இறப்புகள் தொடர்பான புள்ளி விபரங்கள் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் 80 பேர் இறந்துள்ளதை ரயில்வே பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது. வடக்கு ரயில்வே மண்டலத்தில் 10 பேரும், வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் 18 பேரும், வடமத்திய மண்டலத்தில் 19 பேரும், கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் மற்ற மண்டல ரயில்வேயில் இறந்துள்ளனர். சிறப்பு ரயில்களில் கிட்டத்தட்ட 80% உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிகம் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் வெப்பம், சோர்வு, பசி மற்றும் தாகம் ஆகியன அடங்கும்.

இதற்கிடையே மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில், ‘வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு ரயில்களில் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்டவர்கள் அவசிய தேவை இருந்தால்மட்டும் ரயில்களில் பயணிக்க வேண்டும். ரயில்வே துறை அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : migrant workers ,railway , Sharmik Special Train, Migrant Workers, Kills, Railway Security Force Police
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!