×

பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும்; வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு: ககன்தீப் சிங் பேடி

சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும் என ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்தன. வெளி நாடுகளில் இருந்து வந்த இந்த வெட்டுக்கிளிகள், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நீலகிரி, கிருஷ்ணகிரியை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகள் தொல்லை அதிகரித்து வருவகாக புகார் தெரிவிக்கப்பட்டது. வாழை இலைகள், ரப்பர் மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நீலகிரி, கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவதால் வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது பற்றி தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது. வடமாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த வகை வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவில் இருந்து ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள்; அது பயிர்களை சேதப்படுத்தாது. பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம. உள்ளூர் வெட்டிக் கிளிகளில் 250 வகைகள் உள்ளன. வெட்டுக்கிளிகள் குறித்து விவசாயிகள் அச்சம் கொல்ல தேவையில்லை. தொலையுணர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெட்டுக்கிளி நடமாட்டத்தை அறிய முடியும். ரசாயன மருந்துகளை விவசாயிகள் தன்னிச்சையாக பயன்படுத்த வேண்டும்.  தமிழ்நாட்டுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அவற்றை கொல்ல ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Locals ,Gagandeep Singh Bedi , Desert Locust, Attack, Tamil Nadu, Gagandeep Singh Bedi
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...