×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,064க்கு விற்பனை!!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 256 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் தங்கம் விலை ஏறவும் இறங்குமாக இருக்கிறது.சென்னையில் இன்று (மே 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,508 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,476 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 35,808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 256 ரூபாய் உயர்ந்து 36,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இன்று வெள்ளி விலை மிகப் பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.52.70 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.53.80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 53,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,589 ஆகவும், டெல்லியில் ரூ.4,556 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,556 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,453 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,391 ஆகவும் இருக்கிறது.

Tags : Chennai , Chennai, Jewelery, Gold, Price, Shaving
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு