×

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நீங்க சுகர், பீபி நோயாளியா... ரயில் ஏற வராதீங்க! : ரயில்வே துறை வேண்டுகோள்

நெல்லை: கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக நாடு முழுவதும், கடந்த ஒரு மாதமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு ரயில்களில் புறப்பட்டு சென்று விட்டனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ரயில்களில் வரும் தொழிலாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு உள்ள சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதை தவிர்க்க ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புலம் பெயர் தொழிலாளர்களுக்காக நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் பயணித்தவர்களில் சிலர், ஏற்கனவே உள்ள ஆரோக்கிய குறைவு காரணமாக துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டு கடித எண்40-3/2020ன்படி நீண்டநாள் நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், இருதய நோய், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களும், இவற்றிற்கு மருந்து, மாத்திரைகள் எடுத்து கொண்டிருக்கும் பயணிகளும் ரயில் பயணங்களை தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அவசியம் இல்லாதபோது ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.இந்திய ரயில் சேவகர்கள் அனைத்து குடிமக்களுக்கும் 24 மணி நேரமும் ரயிலில் சேவை கிடைக்க உதவி செய்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு மட்டுமே ரயில்வேக்கு முக்கியம். பயணத்தின்போது எந்தவொரு அவசர தேவைக்கும் 139 மற்றும் 138 அல்லது ரயில்வே அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : sucker ,travelers ,patient ,Railway Department , passengers, sucker, a sick patient ,train,Railway Department request
× RELATED உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு...