×

அதிக புரதச் சத்து இருக்கு.. ருசியும் செம.. வெட்டுக்கிளி பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளை விற்கும் ராஜஸ்தான் உணவகங்கள்!!!


ஜெய்ப்பூர் : வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்தன. வெளி நாடுகளில் இருந்து வந்த இந்த வெட்டுக்கிளிகள், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன.இந்த வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது. விவசாய பயிர்களுக்கு பெரும் சவாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்திவிடும் என வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, கிரேவி, லோகஸ்ட் 65 உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அதன், கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.வெட்டுக்கிளிகள் உணவு வகைகள் மிகவும் ருசியாக இருப்பதாக ராஜஸ்தான் பகுதி மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக, வெட்டுக்கிளிகளில் அதிக புரதச் சத்து இருப்பதாகவும் அறிவுரை வழங்குகின்றனர்.


Tags : restaurants ,Rajasthani , Protein, Locust, Biryani, Fry, Gravy, Food, Rajasthan, Restaurants
× RELATED திண்டுக்கல்லில் உள்ள உணவகங்கள்...