×

சீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

நியூயார்க்: உலக சுகாதார மையத்துடன் அமெரிக்கா உறவை துண்டிப்பதாக அதிபர் டோனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக அமெரிக்கா மாறியிருக்கிறது. இங்கு நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டிரம்ப், ‘‘உலக சுகாதார அமைப்புக்கு அதிகப்படியான நிதியை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால், பயணக் கட்டுப்பாடு விதித்த நேரத்தில், எனது முடிவை அந்த அமைப்பு விமர்சனம் செய்து ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதுபோல், அவர்கள் பல விஷயங்களில் தவறு செய்துள்ளனர். கொரோனா குறித்து ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே அவர்கள் எச்சரித்திருக்க வேண்டும்.

ஆனால் அதை செய்யத் தவறி விட்டது. பல நேரத்தில் அந்த அமைப்பு தவறான முடிவுகளையே எடுக்கிறது. மேலும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது நல்லதற்கில்லை. நாங்கள் இனி மிகுந்த விழிப்புடன் செயல்படுவோம். உலக சுகாதார அமைப்பிற்கு செலவிடும் நிதியை நிறுத்தவும் தயங்க மாட்டோம்,’’ என்றார். தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல லட்சம் பேரை கொன்று இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையமும், சீனாவும் சேர்ந்து கொண்டு இதில் நாடகம் ஆகியுள்ளது. வுஹன் வைரஸ் பரவல் குறித்து சீனா மற்றும் உலக சுகாதர மையம் இரண்டும் முக்கிய விஷயங்களை மறைத்துவிட்டது. சீனா தவறு சீனா தவறு உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் பல கோடிகளை அள்ளிக்கொடுத்தோம். ஆனால் உலக சுகாதார மையம் சீனாவின் கைப்பாவை போல செயல்பட்டது.

நாங்கள் 450 மில்லியன் டாலர் செலுத்தினோம். ஆனால் சீனா வெறும் 40 மில்லியன் டாலர் செலுத்தி உலக சுகாதார மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது. நாங்கள் வைத்த கோரிக்கை எதையும் சீனாவோ, உலக சுகாதார மையமோ கேட்கவில்லை. தொடர் ஆதரவு தொடர் ஆதரவு நான் சீனாவில் இருந்து வரும் விமானங்களை தடை செய்ததன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதை கூட தொடக்கத்தில் உலக சுகாதார மையம் எதிர்த்தது. தொடக்க காலத்தில் இருந்து இப்போது வரை உலக சுகாதார மையம் இதில் சரியாக செயல்படவில்லை. சீனாவை தொடர்ந்து உலக சுகாதார மையம் ஆதரித்து வந்தது.

மறைப்பு மறைப்பு கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை உலக சுகாதார மையம் மறைத்துவிட்டது. இதன் மூலம் இதன் பாதிப்பை உலக சுகாதார மையம் மறைத்தது. உலக நாடுகளுக்கு கொரோனா பரவுவதை சீனாவும், உலக சுகாதார மையமும் நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். ஆனால் அதை உலக சுகாதார மையம் செய்யவில்லை. உறவை துண்டிக்கிறோம் உறவை துண்டிக்கிறோம் இதனால் நாங்கள் உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக நாங்கள் உறவை துண்டிக்கிறோம். இதனால் அவர்களுக்கு இனி நாங்கள் நிதி வழங்க மாட்டோம். உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதியை நாங்கள் அப்படியே வேறு நாடுகளில், அமைக்களில் சுகாதார தேவைக்காக பயன்படுத்த போகிறோம்., என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : World Health Center ,China , Continued support for China; We have severed ties with the World Health Center
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்