கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்: விக்கிரமராஜா அறிக்கை

சென்னை: கோயம்பேடு வணிகவளாகத்தை புனரமைத்து மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வணிக நிறுவனங்களான ஜவுளிக் கடைகள், நகை கடைகள், மின்சாதன கடைகள், கட்பீஸ் மொத்த ஜவுளி வியாபார கடைகள், கிடங்கு தெரு கடைகள், கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ெகாத்தவால் சாவடி உணவு தானிய மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் இன்னும் முறையாக திறப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படாமல் அனைத்து வணிகர்கள் மற்றும் அவை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதை அவசர கால நடவடிக்கையாக கவனத்தில் கொண்டு உடனடியாக வணிக நிறுவனங்களை திறப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>