×

மாநிலங்களவை எம்பிவீரேந்திர குமார் மறைவு: பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினரும், மலையாள பத்திரிக்கையான மாத்ரூபூமியின் நிர்வாக இயக்குனருமான வீரேந்திரகுமார் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரகுமார்(84). இவர் 1996 மற்றும் 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அம்மாநிலத்தின் பத்திரிக்கையான மாத்ரூபூமியில் நிர்வாக இயக்குனர். மேலும் இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும், பிடிஐ நிர்வாக இயக்குனர்களில் ஒருவருமாக இருந்தவர். இந்நிலையில் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு வீரேந்திரகுமார் உயிரிழந்தார். எம்பி வீரேந்திரகுமார் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், வீரே்நதிரகுமார் மறைவினால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். அவர் ஒரு திறமையான சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு குரல் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்” என பதிவிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ்முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது டிவிட்டர் பக்கத்தில், “எம்பி வீரேந்திரகுமார் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு  இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்வற்றில் இவர் இருந்துள்ளார். கடைசியாக, கேரளாவில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Virender Kumar ,Modi ,Rajya Sabha ,demise ,Rahul Rajya Sabha ,Rahul , Rajya Sabha, MP Veerendra Kumar, Late, Prime Minister Modi, Rahul, Rangal
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு...