×

சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் அவசியம் இருந்தால் மட்டும்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும்: ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்

சென்னை: பல்வேறு விதமான நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இது போன்ற பயணத்தை தவிர்க்கலாம் என்று கூறி அவசர உதவி எண்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் இந்திய ரயில்வே துறை  நாடு முழுவதும் தினமும் ஷ்ரமிக் ஸ்பெஷல் எனும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரயிலில் இதுவர 40 லட்சத்திற்கு அதிகமான பயணிகள் தங்களுடைய மாநிலத்திற்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.

அதைப்போன்று தமிழகத்தில் இருந்து 170 ரயில்கள் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொள்வர்கள், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், ஓடிசா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு தங்களுடைய மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் 2 அல்லது 3 நாட்கள் வரை ரயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு, கொரோனா பாதிப்பு காரணமாக எந்த ரயில் நிலையங்களிலும் ரயில்களை நிறுத்தாமல் இயக்கப்படுகிறது.

அப்படி ஒரு சில ரயில் நிலையங்களில் நிறுத்தினாலும் ஊரடங்கு காரணமாக ரயில் நிலையங்களில் உள்ள கடைகள் திறக்காததால் கையில் பணம் இருந்தும் உணவு, தண்ணீர், பிஸ்கட் போன்ற எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் அவர்கள் பசியோடு தான் அந்த ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ரயில்களில் வெப்ப கதிர்வீச்சு அதிகமாக தாக்குகிறது. இதனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்கனவே சிலருக்கு உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் இருப்பதாலும், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ரயில் பயணத்தின் போது சில துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம் கடந்த மே 17ம்  தேதி பாதிக்கப்படக்கூடிய பயணிகள் அதாவது உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு நோய், இருதய நோய், புற்றுநோய், நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இது போன்ற பயணத்தை தவிர்க்கலாம் என்று கூறியிருந்தது.

மேலும் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே நிர்வாகம் 24 மணி நேரமும் சேவை செய்ய காத்துக் கொண்டு இருக்கிறது. எனவே ரயில்வே நிர்வாகம் வேண்டுகோளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரயில் பயணத்தின் போது அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் 139, 138 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது ஏதாவது அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் பயணிகள் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ரயில்களில் வெப்ப கதிர்வீச்சு அதிகமாக தாக்குகிறது. இதனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்கனவே சிலருக்கு உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் இருப்பதாலும், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஆபத்தை ஏற்படுத்துகிறது.


Tags : Children ,elderly ,Railway Administration , Children, the elderly, the Railway Administration
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...