×

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய திருதணிகாச்சலத்தின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தனக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு சித்த வைத்தியர் திருதணிகாச்சலம் , சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்தநிலையில், இவர் போலி சித்த வைத்தியர் மற்றும், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவதாக கூறி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதில் சென்னை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிந்து, திருதணிகாசலத்தை மே 6ம் தேதி கைது செய்தனர். பின்னர் போலீசார் 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில், எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைதொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தை எதிர்த்து மனுகொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக சித்த மருத்துவர் திருத் தணிகாசலத்தை சைபர் குற்றத்தடுப்பு காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது மேலும் பல புகார்கள் வந்ததை தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார். தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து, திருத்தணிகாசலம் சார்பில்  தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அல், பாரம்பரிய மருத்துவம் செய்து வரும் எனக்கு, கடலூர் வருவாய்த்துறை  முறையான சான்றிதழ் வழங்கியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே நான் தெரிவித்தேன்.  என்னுடைய சிகிச்சையால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. நான் கூறிய கருத்துக்களை காவல்துறை தவறாக புரிந்து கொண்டுள்ளது. எனவே, என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்ய வேண்டும். என்னை விடுதலை செய்யுமாறு  உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Court of Appeal ,Corona ,Sessions Court , Corona, Drug, Rumor, Triathlon, Sessions Court
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...