×

11 ஆண்டுகளில் இல்லாத அளவு: பொருளாதாரம் கடும் வீழ்ச்சி: அரசு புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி, 3.1 சதவீதமாக சரிந்துள்ளது. ஏற்கெனவே, ஐஎம்எப், உலக வங்கி, கிரிசில், சிபில் உட்பட2 பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி செல்லும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றன.  இந்த சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விவரங்களை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், கடந்த 2019-20 நிதியாண்டில் ஜிடிபி 4.2 சதவீதமாக உள்ளது என தெரிவித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் இது 6.1 சதவீதமாக இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட புள்ளி விவரம், நிதி அமைப்புகள் வெளியிட்ட கணிப்புகளுடன் ஒத்திருக்கின்றன.  

கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட, முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில் கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2வதாக, பிப்வரியில் வெளியிட்ட 2வது முன்கூட்டிய மதிப்பீட்டிலும், இதே அளவு வளர்ச்சி விகிதம் இருப்பதாக கூறப்பட்டது.  இந்த நிலையில், இதை விடவும், வளர்ச்சி குறைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு: கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்த  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த நிதியாண்டில்  நிதிப்பற்றாக்குறை 3.8 சதவீமாக இருக்கும் என தெரிவித்தார். முன்னதாக இது  3.3 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அரசுக்கு வருவாய்  சரிவு காரணமாக, நிதிப்பற்றாக்குறை 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய  அரசு தெரிவித்துள்ளது.

* கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வெளியிட்ட முதல் மற்றும் 2வது முன்கூட்டிய மதிப்பீட்டில், ஜிடிபி 5 சதவீதமாக இருக்கும் என அரசு கூறியது. இந்த அளவு கூட வளர்ச்சி ஏற்படவில்லை.
* கடந்த 2019-20 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக உள்ளது. இது 11 ஆண்டில் இல்லாத கடும் சரிவு.
* இதுபோல், ஜனவரி - மார்ச் காலாண்டில் ஜிடிபி 3.1 சதவீதமாக சரிந்துள்ளது.

முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி 38.1% சரிந்தது
ஊரடங்கு காரணமாக, கடந்த ஏப்ரலில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 38.1 சதவீதம் சரிந்துள்ளது. இவற்றில், நிலக்கரி (15.5%), கச்சா எண்ணெய் (6.4%), இயற்கை எரிவாயு (19.9%), சுத்திகரிப்பு (24.2%), உரம் (4.5%), ஸ்டீல், (83.9%), சிமெண்ட் (86%), மின் உற்பத்தி (22.8%) சரிந்துள்ளன. கடந்த மாதம் இந்த துறைகளில் உற்பத்தி 9 சதவீதம் குறைந்திருந்தது.

Tags : downturn , Economy is falling, government point
× RELATED மகாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத...