×
Saravana Stores

இருக்குற சிம்முக்கே ரீசார்ஜ் செய்ய காசில்ல... ஆளுக்கு 7 சிம் கார்டு வாங்கணுமா? 11 இலக்கமா மாத்துங்க; டிராய் பரிந்துரை

புதுடெல்லி: மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரைத்துள்ளது.  இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரைகள்: தற்போது தரைவழி தொலைபேசி இணைப்புகளில் இருந்து மொபைல் நம்பருக்கு டயல் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை. இனி, மொபைல் எண்ணுக்கு பேச முன்னதாக பூஜ்யம் சேர்த்து டயல் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டவையாக இருக்கின்றன. அதை 11 இலக்கமாக மாற்றலாம்.  இதற்காக, தற்போது உள்ள 10 இலக்க மொபைல் எண்ணுக்கு முன்பு 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும். இதன்மூலம் மொத்தம் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியும்.

இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் டாங்கிள்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது. தற்போது 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. ஏற்கெனவே உள்ளதை விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், ஆளுக்கு 7 சிம் வழங்க முடியும்.  இருக்கும் சிம்கார்டுக்கே ரீசார்ஜ் செய்ய காசில்லாமல் மக்கள் தடுமாறிக்  கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்படி ஒரு பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது.


Tags : Casilla ,Troy , recharge, 7 sim card, Troy
× RELATED ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து