×

கருப்பின தொழிலாளி படுகொலை: அமெரிக்காவில் மேலும் போராட்டம் பரவுகிறது

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீசாரால், கருப்பின தொழிலாளி ஒருவர் முட்டிக்காலால் கழுத்தில் அழுத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் பரவி வருகிறது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் என்ற நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின காவலாளியை வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி ஒருவர் தனது முட்டிக்காலால் கழுத்தில்  அழுத்தி  கொன்ற  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வைரலா
னது. அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் போல் நடந்த இந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த சம்பவத்தை கண்டித்து மினசோட்டா மாகாணத்தில் நேற்று முன்தினம் போராட்டமும், வன்முறையும் வெடித்தது. நேற்று முன்தினம் மின்னியாபோலிஸ் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் நேற்று பரவியது. மின்னியாபோலிஸ் காவல் நிலையத்தை போராட்டக்கார்கள்  எரித்தனர். போராட் டத்தை ஒடுக்க அதிரடிப்படைகள் அழைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், பிளாய்ட்டின் படுகொலை பற்றி அதிபர் டிரம்ப் நேற்று கூறுகையில், ‘‘இந்த சம்பவத்தை நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்.

கைவிலங்கிடப்பட்டு போலீஸ் காவலில் இருந்த பிலாய்ட் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை தருகிறது,” என்றார். வழக்கமாக, அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடக்கும்போது, பெரும்பாலும் அதிபர் டிரம்ப் மவுனம் காப்பார். போலீசை பாதுகாக்கும் வகையிலேயே அவரது நடவடிக்கைகள் இருக்கும். ஆனால், முதல் முறையாக கருப்பினர் உயிரிழந்த சம்பவத்துக்கு  டிரம்ப்  வருத்தம் தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் தேர்தலுக்காக அவர் நடிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.



Tags : US ,Black , Black worker slaughter, America, struggle
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!