×

ஊழியருக்கு கொரோனா நாடாளுமன்ற கட்டிடத்தின் 2 தளங்கள் சீல்

புதுடெல்லி: மாநிலங்களவை செயலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத்  தொடர்ந்து நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் 2 தளங்களுக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 23ம் தேதி பட்ஜெட்  கூட்டத் தொடரின் போது, முதல் முறையாக துப்புரவு பணியாளர் ஒருவருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டது. இதனால் கூட்டத் தொடர் பாதியிலேயே முடிக்கப்பட்டது.   ஊரடங்கால் நாடாளுமன்ற அலுவலகம் மூடப்பட்ட நிலையில், கடந்த 3ம் தேதி  மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின் 2 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவைச் செயலக அதிகாரி ஒருவருக்கு  கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இணைப்பு  கட்டிடத்தின் 2 தளங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்ற தளங்களில்  பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் முறையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே நாடாளுமன்ற  வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


Tags : Corona Parliament ,building ,sites , Employee, Corona, Parliament, 2 sites sealed
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி