×

மேற்கு வங்க அமைச்சருக்கு கொரோனா

கொல்கத்தா: மேற்கு வங்க தீயணைப்பு துறை அமைச்சருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 344 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், இம்மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,536 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இம்மாநில தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. அவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதில், அமைச்சர் சுஜித் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அமைச்சர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.


Tags : Corona ,West Bengal , Corona , West Bengal Minister
× RELATED கர்நாடகா முதல்வருக்கு கொரோனா டிவிட்டரில் தகவல்