×

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

புழல்:  செங்குன்றம் அருகே பம்மதுகுளம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் முரளிதரன் (16). தனியார் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தான்.இந்நிலையில், பம்மதுகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் மதியம் முரளிதரன் மற்றும் அவனது 6 நண்பர்களும் குளித்து கொண்டிருந்தனர். முரளிதரனுக்கு நீச்சல் தெரியாததால், ஆழமான பகுதியில் உள்ள சேற்றில் சிக்கி, நீருக்குள் மூழ்கினான். சக நண்பர்களால் அவனை  மீட்க முடியவில்லை.

தகவலறிந்த செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் இருந்து முரளிதரனின் சடலத்தை மீட்டு  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 


Tags : Student ,well , Well, student dies
× RELATED முன்விரோத தகராறில் கல்லூரி மாணவன் படுகொலை: தப்பிய 3 பேருக்கு வலை