×

கூலித்தொழிலாளி சடலம் மீட்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் 42 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக கவரைப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (42). கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும், அவர் இறந்து கிடந்த இடத்தில் பூச்சிமருந்து பாட்டில் இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் கார்த்திக் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


Tags : Mercenary Corpse Recovery , Mercenary, corpse recovery
× RELATED வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில்...