×

அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை இ.ஏஸ்.டி.நகர் மேற்கு பகுதியில் வாடகை கட்டிடத்தில்  செயல்பட்டு வரும் நியாயவிலை கடைக்கு புதிய கட்டிடம் கட்ட  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹8.50 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு, அப்பகுதியில் பாறை புறம்போக்கு நிலத்தை பேரூராட்சி நிர்வாகம் தேர்வு செய்தது.  இந்நிலையில், கடந்த வாரம்  நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில்,  பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி கட்டிட  பணிகளை துவக்கி வைத்தார். குறிப்பிட்ட இடம் தங்களுக்கு சொந்தமானது என தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்டிட பணிகள்  நிறுத்தப்பட்டது.  இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று     நியாயவிலை கடை கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த    பள்ளிப்பட்டு வட்டாட்சியர் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் மாலா ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி   நியாயவிலை கடை கட்டிடம் அமைய உள்ள பகுதியில் சர்வே செய்து தனியார்  பட்டாவில் வரும் நிலத்தை   அரசு பாறை புறம்போக்கு நிலத்தில்  நியாயவிலை கடை கட்டிடம் கட்ட தேர்வு செய்து வழங்கினர். மேலும், அதே பகுதியில்   ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு  நிலத்தை மீட்டு  அங்கன்வாடி மையம், பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  இதுதொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.Tags : demonstration , overnment land, public demonstration
× RELATED எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்