×

கொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை; புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி; 23 பேருக்கு சிறை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டுள்ள கைதிகளுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,246-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை புழல் சிறையிலுள்ள 94 கைதிகளைப் பரிசோதனை செய்ததில் மொத்தம் 30 கைதிகளுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமைச்சுப் பணியாளர் ஒருவர் நெஞ்சு வலிக் காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மொத்தம் 19 சிறைக்காவலர்களும் இந்தக் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று கிடைத்துள்ளது. இதில் ஏழு பேருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 23 பேர் சிறை வளாகத்திலேயே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. கடலூரிலிருந்து பயிற்சிக்காக வந்த ஐந்து கைதிகளிடமிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தண்டனைக் கைதிகளுக்கு நேற்று முன்தினம் பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறையும் சிறை நிர்வாகமும் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Madras ,detainees , Corona, Madras, Pulle Central Prison
× RELATED டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி