×

கிருமி நாசினி, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காததால் சென்னை தி நகரில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள 4ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கடைகள், தொழிற்சாலைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் சில பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூடும்படி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்காதது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் கடைகளை மூட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிக அளிவில் பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் சென்னையில் கொரோனாவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்தது. அதேபோல் தமிழகத்தில் கொரேனாவால் நேற்று மட்டும் 827 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 12 உயிரிழந்துள்ள நிலையில் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது. எனவே நேற்று மட்டும் தமிழகத்தில் 639 பேர் குணமடைந்த நிலையில் 10,548-ஆக உயர்ந்துள்ளது. 


Tags : corporation ,shops ,Chennai Antiseptic , Corporation,orders closure , shops,Chennai,non-availability
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி