×

போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை:  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்ததாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த கே.எம்.கணேசன் (கோம்மை பேரூராட்சி கழக பொருளாளர்) அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.
 
அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் மருந்து கடைக்கு நேற்று முன்தினம் மருந்து வாங்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல்தொல்லை கொடுத்ததாக கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதையடுத்தே அவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.



Tags : executive removal ,AIADMK ,OPS , Poko Law, Intramural Executive Removal, OPS, EPS
× RELATED இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று விசாரணை..!!