×

ஆன்லைன் மது விற்பனை கோரியவருக்கு 50,000 அபராதம்

மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேட்டுப்பட்டி மனமகிழ் மன்றத்தலைவர் ரவிகண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசின் அனுமதி பெற்று எங்கள் உறுப்பினர்களுக்கு மது விநியோகம் செய்கிறோம். கொரோனா ஊரடங்கால் கிளப் 50 நாட்களுக்கு ேமலாக மூடப்பட்டுள்ளதால், ஸ்டாக் உள்ள மதுபாட்டில்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு ஸ்டாக் மது விநியோகிக்க அனுமதித்துள்ளது. அதைப்போல, மன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.  

இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்து, ‘‘மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.


Tags : Online liquor sale, 50,000 fine, corona, curfew
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி