×

சென்னையில் கொரோனா பாதிப்பு 6 மண்டலங்களில் தலா 1000 கடந்தது: மாநகராட்சி தகவல்

சென்னை : சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 558 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,625 பேர் குணமடைந்துள்ளனர். 93 பேர் உயிரிழந்துள்ளனர். 5,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த 93 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.14 சதவீதத்தினர் ஆண்கள், 39.84 சதவீதத்தினர் பெண்கள், திருநங்கை 3 பேர்.மண்டலம் வாரியாக பார்க்கும்போது 6 மண்டலங்களில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ராயபுரத்தில் 2,252 பேர் , கோடம்பாக்கத்தில் 1,559 பேர் , திருவிக நகரில் 1,325 பேர், தேனாம்பேட்டையில் 1,317 பேர், தண்டையார்பேட்டையில் 1,262 பேர், அண்ணாநகரில் 975 பேர், வளசரவாக்கத்தில் 777 பேர், அடையாரில் 672 பேர், அம்பத்தூரில் 504 பேர், திருவொற்றியூரில் 369 பேர், மாதவரத்தில் 274 பேர், சோழிங்கநல்லூரில் 208 பேர், பெருங்குடியில் 212 பேர், மணலியில் 168 பேர், ஆலந்தூரில் 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயது வாரியாக, ஆண்களில் 9 வயது வரை உள்ள 275 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 533 பேர், 20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 1528 பேரும், 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 1627 பேரும், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 1403 பேர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 1088 பேர், 60 முதல் 69 வயதுவரையுள்ள 541 பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 217 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெண்களில் 9 வயது வரை உள்ள 242 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 473 பேர், 20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 1024 பேர், 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 980 பேரும், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 852 பேர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 691 பேர், 60 முதல் 69 வயது வரையுள்ள 380 பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 169 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Corona ,zones ,Chennai ,Corporation Information Corona , Madras, Corona, 6 zones, corporation
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...