×

மகளை பாதுகாப்பாக அனுப்ப 20 லட்சத்தில் தனி விமானம்: ம.பி.யில் மதுபான அதிபர் பாசம்

போபால்: கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள், பஸ்களில் அடித்து பிடித்து சொந்த ஊர் செல்கின்றனர். பணம் இல்லாதவர்கள் கால்நடையாகவே சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த மதுபான அதிபர் ஒருவர், தனது மகள் உள்பட 4 பேர் கொரோனாவிடம் சிக்காமல் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக 180 பேர் பயணம் செய்யக் கூடிய தனியார் விமானத்ைத வாடகைக்கு அமர்த்தியுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த அந்த தொழிலதிபரின் மகள், டெல்லியில் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களை பராமரிக்க பணிப்பெண் ஒருவர் உள்ளார். கொரோனா ஊரடங்குக்கு முன் போபால் வந்திருந்த மகள் உள்ளிட்ட 4 பேரும், டெல்லி திரும்ப முடியாமல் கடந்த 2 மாதங்களாக தவித்தனர்.

தொடர்ந்து போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்காத நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து, மதுபான அதிபர் தனி விமானம் ஒன்றை, மகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக ரூ.20 லட்சம் பேசி வாடகைக்கு அமர்த்தினார். இதையடுத்து, 180 பேர் அமரக்கூடிய அந்த விமானம் கடந்த 25ம் தேதி டெல்லியில் இருந்து விமான ஊழியர்களுடன் போபால் வந்தது.பின்னர், அங்கிருந்து மதுபான அதிபரின் மகள், அவரது 2 குழந்தைகள், பணிப்பெண் என 4 பேருடன் மீண்டும் டெல்லி சென்றது.Tags : Flight ,Love , Daughter, Coroner, Madhya Pradesh, Liquor Chancellor
× RELATED காதலுக்கு தந்தை எதிர்ப்பு மகள் தற்கொலை