×

ராஜஸ்தானில் 90,000 ஹெக்டேர் உள்பட வடமாநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள்: ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

புதுடெல்லி: ஆப்பிரிக்காவில் இருந்து கூட்டம் கூட்டமாக புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் பயிர்களை நாசம் செய்து விட்டு, தற்போது ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப் அரியானா, மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.  ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில் இவை கபளீகரம் செய்து வருகின்றன. இம்மாநிலத்தின் கங்கா நகர் பகுதியில் 4 ஆயிரம் ஹெக்டர் பயிர்களையும், நாகுர் பகுதியில் 100 ஹெக்டேர் பயிர்களையும் தின்று நாசம் செய்துள்ளன. ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியிலும் வெட்டுக்கிளிகள் புகுந்து மரங்களை ஆக்கிரமித்துள்ளன.   இதேபோல், உத்தரபிரதேசத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் வெட்டுக்கிளிகளால் நாசம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஒழிக்க கடும் நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள பிம்ப, தொட்டஹசாளே கிராமங்களில் ஆந்திராவில் இருந்து நுழைந்த வெட்டுக்கிளிகள் மரங்களை தாக்கியுள்ளன. அவற்றை  விவசாயிகள் தீ மூட்டி விரட்டி வருகின்றனர். மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்துக்கு படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், தற்போது மும்பை நகரிலும் ஊடுருவியுள்ளன. மும்பையை அடுத்து குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ள பால்கர் மாவட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Rajasthan ,Northern Territories , Rajasthan, 90,000 hectares, northern lands, crops, grasshoppers
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்