×

சென்னையில் ஜூன் மாதம் டாஸ்மாக் கடைகள் திறப்பு?அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள்  கூறினர். ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 7ம் தேதி சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.   எனினும் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் சென்னையில் டாஸ்மாக், ஆட்டோ, சலூன்கள் உள்பட பல்வேறு சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இது குறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது: சென்னையில் 800 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் நாள் தோறும் ₹30 முதல் ₹50 கோடி வரையில் வருவாய் கிடைக்கும். ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளது. எனவே, கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தனிநபர் இடைவெளி என்பது கட்டாயம் என்பதால் அதை முழுமையாக கடைபிடிக்க தேவையான புதிய உத்தரவுகளை வரையறுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே, முன்னேற்பாடு நடவடிக்கையாக கடைகளின் முன்பு மரத்தடுப்புகள் அமைப்பது, கிருமி நாசினி தெளிப்பது ஆகிய நடவடிக்கைகளை தயார் நிலையில் இருக்க டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, ஜூன் மாதத்தில் இருந்து சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்


Tags : Opening ,Task Shops ,Chennai ,TASMAC ,stores , Madras, June, TASMAC , Officers
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு