×

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் 80க்கும் மேற்பட்டோர், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.  இவர்களுக்கு மாதம் ₹6 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தை உயர்த்தி  தர கோரி பல மாதங்களாக வலியுறுத்துகின்றனர்.  இந்நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியத்தை உயர்த்திர தர வேண்டும். இல்லாவிட்டால், தூய்மைப்பணிகளை செய்ய முடியாது என கூறி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்தனர்.

இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும், ஒப்பந்த நிர்வாகத்தினரும், தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது ஜூன் மாதம் முதல் ₹500 உயர்த்தி  தருவதாக ஒப்பந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


Tags : Cleanup employees , Cleanup employees, struggle
× RELATED சமூக இடைவெளியின்றி குப்பை லாரியில்...