×

தனியார் தொழிற்சாலையில் மயங்கி விழுந்து ஊழியர் சாவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கண்ணாடி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசாவை சேர்ந்த கிருபாசிந்து ஷெட்டி (48) என்பவர் உள்பட ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருபாசிந்து ஷெட்டி பணியில் ஈடுபட்டார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கிருபாசிந்து ஷெட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : factory Employee ,factory , Private factory, fainting, employee death
× RELATED கொரோனாவால் பாதிப்பு ஸ்டான்லி மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழப்பு