×

அடுக்குமாடி குடியிருப்பு முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி  வாரியம் சார்பில் புரசைவாக்கம் பராக்கா சாலையில் ரூ.74 கோடியே 21 லட்சம்  செலவில் கட்டப்பட்டுள்ள 160 வாரிய பணியாளர்களுக்கான வாடகை அடுக்குமாடி  குடியிருப்புகள் மற்றும் திருவொற்றியூர் சலவைத்துறை  பகுதி-ஐஐ பகுதியில் கட்டப்பட்ட 32 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதேபோல், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்  சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


Tags : Edappadi ,building , Chief Minister Edappadi , building
× RELATED மத்திய நிதியமைச்சகம் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து