×

ஐஐடி ஊழியர், டாக்டர் கொரோனாவுக்கு பலி

சென்னை: சென்னை ஐஐடி 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீவன் சத்யராஜ் (53). இவர், சென்னை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். உடல் பருமன் காரணமாக இருவருக்கு மூச்சு திணறல் இருந்துள்ளது. கடந்த 25ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், உடனே ஐஐடி வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவு வந்ததில் இறந்த ஸ்டீவன் சத்யராஜிக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து அவரது உடல்  தரமணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மார்க்கெட் லைன் பகுதியை சேர்ந்த ஒருவர், பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, இவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. அனைவருமே சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவர் நேற்று இறந்தார்.



Tags : Corona IIT ,Dr. ,Corona , IIT Staff, Doctor, Corona, Kills
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!